என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மத்திய மந்திரி சுரேஷ் பிரபு
நீங்கள் தேடியது "மத்திய மந்திரி சுரேஷ் பிரபு"
ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். #JetAirways
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.
கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.
மேலும் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோர் இதில் தலையிட்டு சம்பள பாக்கியை பெற்று தரவேண்டும். நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதில் இருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். #JetAirways
இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.
கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட் டோம் என்று தெரிவித்து உள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதில் இருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். #JetAirways
கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். #KannurAirportcommence #KannurInternationalAirport
திருவனந்தபுரம்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் நகருக்கு விமானங்கள் வந்து சென்றன.
அதன் பின்னர் இந்த பகுதிக்கு நேரடியாக விமானச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு அனுமதி அளித்தது.
இதைதொடர்ந்து, இங்குள்ள மாட்டானூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கு 17-12-2010 அன்று அந்நாள் கேரள முதல் மந்திரி அச்சுதானந்தன் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இந்த சர்வதேச விமான நிலையத்தை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் இங்கிருந்து அபுதாபிக்கு இன்று காலை 10.13 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
ஏற்கனவே, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கண்ணூரையும் சேர்த்து இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்களை கொண்ட இந்தியாவின் ஒரே மாநிலமாக கேரளா உள்ளது குறிப்பிடத்தக்கது. #KannurAirportcommence #KannurInternationalAirport
மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
சென்னை:
அவ்வகையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி என்றும் கருணாநிதியை பாராட்டினார்.
இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.
அவ்வகையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி என்றும் கருணாநிதியை பாராட்டினார்.
இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சியை மத்திய தொழில்துறை மந்திரி சுரேஷ்பிரபு தொடங்கி வைத்தார்.
சென்னை:
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏ.சி.எம்.இ.இ. மெஷின் டூல்ஸ் தொழில் நுட்ப கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.
மத்திய தொழில்துறை மந்திரி சுரேஷ்பிரபு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பென்ஜமின், ஏ.சி.எம்.இ.இ. தலைவர் அய்யப்பன், சதீஷ்பாபு, அசோக் சோர்டியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
இக்கண்காட்சியில் உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கக் கூடிய மெஷின் டூல்ஸ் தொழில் நுட்பம் இடம் பெறுகிறது.
இதில் 28 நாடுகளைச் சேர்ந்த 480 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. #Tamilnews

×

X